அருண் விஜய்க்கு வில்லனாக மாறிய தயாரிப்பாளர்
அருண் விஜய்யின் பாக்ஸர் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் தயாரிப்பாளர் எக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் மதியழகன்.
சில
மாதங்களுக்கு முன் அருண் விஜய்யின் பாக்ஸர் திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு
வெளியானது. அருண் விஜய், ரித்திகா சிங் பிரதான வேடங்களில் நடிக்கும் பாக்ஸர் படத்தில்
வில்லன் வேடத்தில் நடிப்பது யார் என்பதை அறியும் ஆவல் எல்லோருடைய மனதிலும் எழுந்தது.
சரியான நபரைத் தேர்ந்தெடுக்கும் நீண்ட தேடல் இப்போது முடிவுக்கு வந்து விட்டது. இப்படத்தின்
தயாரிப்பாளர் மதியழகனே இந்த வேடத்துக்கு பொருத்தமானவர் என்று ஒட்டு மொத்த படக்குழுவும்
முடிவு செய்து ஏகமனதாக அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்தைத் தயாரித்த வி.மதியழகன் தற்போது ஹன்சிகா மோத்வானி நடிக்கும் மகா படத்தைத் தயாரித்து வருகிறார். மேலும் எக்ஸெட்ரா என்ட்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ராஜா மந்திரி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, செம போதே ஆகாதே, அப்பா ஆகிய படங்களையும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை