சியாட்டில் நகரில் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த தடை
அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜார்ஜ் பிளாயிட் என்ற கறுப்பின வாலிபரின் கழுத்தில் பொலிஸ்காரர் ஒருவர் தனது கால் முட்டியால் அழுத்தியதில் அந்த வாலிபர் உயிரிழந்தார்.
இதையடுத்து பொலிஸார்
நிறவெறியுடன் நடந்து கொண்டதாகக் கூறி நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் அரங்கேறி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு, சியாட்டில் நகரில் நடந்த போராட்டத்தின்போது பொலிஸாருக்கும்
போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இந்நிலையில் சியாட்டில் நகரில் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களில் பொலிஸார் வேண்டுமென்றே வன்முறையை ஈடுபடுவதாகவும் மக்களின் உரிமையை நசுக்குவதாகவும் கூறி அந்த நகர கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ரிச்சர்ட் ஜான்ஸ் சியாட்டில் நகரில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டு ரப்பர் குண்டு ஆகியவற்றைப்
பயன்படுத்த தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். அடுத்த 14 நாட்களுக்குள் இந்த தடை அமலில் இருக்கும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை