அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-சீனா எல்லை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் - ரஷ்யா
லடாக் எல்லையில் இந்திய-சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டு இந்திய ராணுவத்தில் 20 வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ரஷ்யா நடத்தும், இந்தியா - சீனா - ரஷ்யா, ஆகிய மூன்று நாடுகளும் கலந்து கொள்ளும் ஆர்.ஐ.சி முத்தரப்பு கூட்டத்தில் பங்கேற்க இந்தியா மறுத்தது.
பின்னர் நடந்த பேச்சுவார்தையை அடுத்து, இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய தரப்பில் முடிவு செய்யப்பட்டது. வீடியோ கான்பரன்சிங் மூலம் இதில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அனைத்து நாடுகளும் சர்வதேச விதிகளை மதித்து நடக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது, “இந்தியா, சீனா தங்கள் எல்லை பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்வார்கள். அமைதியான முறையில், பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இருநாடுகளும் உறுதியாக உள்ளன. இந்த விவகாரத்தில் வெளிநாட்டினரின் உதவி அவர்களுக்கு தேவைப்படாது. இதுகுறித்து இருநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை