நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்யவில்லை: விசாரணைக்கு உறவினர்கள் கோரிக்கை
டோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 34. அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘ஆறு மாத காலமாக சுஷாந்த் சிங் மன அழுத்தத்துக்கான சிகிச்சையில் இருந்துவந்துள்ளார். அவருடைய உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வுகள் தற்கொலை என்பதை உறுதிப்படுத்துகிறது.
இதுவரையில், தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள், அவரது உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட நேரத்தில், சமையற்காரர்கள் இருவரும், வீட்டு வேலை செய்யும் நபர் ஒருவரும், அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் இருந்துள்ளனர்
அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனைக்காக டாக்டர் ஆர்.என். கூப்பர் நகராட்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை இப்போது நிறைவடைந்துள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கையில் இது தற்கொலை வழக்கு என்று கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுஷாந்தின் உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருளை கண்அறிய பகுப்பாய்வுக்காக ஜே.ஜே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன. சுஷாந்த்தின் இறுதி சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை இரவு பாட்னாவிலிருந்து மும்பைக்கு வந்து அவரது தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களால் செய்யப்படும்.
இந்த நிலையில் சுஷாந்த் மரணம் குறித்து பேசியுள்ள அவர் தாய் மாமா, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று நாங்கள் நினைக்கவில்லை, அவரது மரணத்தின் பின்னணியில் ஒரு சதி இருப்பதாக தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும் என கூறி உள்ளார்.
குறிப்பாக அவரது மாமனார் மற்றும் குடும்பத்துடன் நெருக்கமான பலர் அவரது மரணத்தில் ஒரு 'சதி' இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
கருத்துகள் இல்லை