மைக்கல் கிளார்க்குக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது
ஆஸ்திரேலியாவில் கிறிக்கெற்றில் முக்கிய பங்காற்றிய வீரருக்கு வழங்கப்படும் ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா விருதுக்கு அந்த அணியின் முன்னாள் கப்டன் மைக்கல் கிளார்க் தேர்வு செய்யப்பட்டார்.
அவுஸ்திரேலியாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, அந்த நாட்டு அரசின் சார்பில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2015-ம் ஆண்டு அவுஸ்திரேலியா
அணிக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக்கொடுத்த அணியின் கப்டனாக திகழ்ந்த மைக்கேல் கிளார்க், இந்த ஆண்டுக்கான ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான கிளார்க் ஆஸ்திரேலியா அணிக்காக 115 டெஸ்ட் போட்டிகளிலும், 245 ஒருநாள் போட்டிகளும்,
34 டி20 போட்டிகளிலும்
விளையாடியுள்ளார்.
இதற்கு முன்னதாக, ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா
விருதை முன்னாள் கப்டன்கள் ரிக்கி பாண்டிங், மார்க் டெய்லர், ஸ்டீவ் வாக், அலன் பார்டர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிறிக்கெற் வீரர்கள் பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை