அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டனின் சிலை சேதப்படுத்தப்பட்டது
மேரிலாந்து
மாகாணம் பால்டிமோர் நகரில் உள்ள அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனின் சிலையும்
அவரது நினைவிடமும் சேதப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவில்
மின்னாபொலிஸ் நகரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோது கறுப்பினத்தைச் சோர்ந்த ஜார்ஜ்
பிளாய்ட் என்ற வாலிபர் உயிரிழந்ததைக் கண்டித்து அந்த நாடு முழுவதும் போராட்டம் நடந்து
வருகிறது. இந்த நிலையில் போராட்டத்தின் ஒரு
பகுதியாக காலனியாதிக்கம் மற்றும் கருப்பின
அடிமைத்தனத்தின் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேரிலாந்து
மாகாணம் பால்டிமோர் நகரில் உள்ள அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனின் சிலையும்
அவரது நினைவிடமும் நேற்று சேதப்படுத்தப்பட்டது.
ஜார்ஜ் வாஷிங்டனின் சிலை மீது சிவப்பு சாயம் பூசிய போராட்டக்காரர்கள் இனவெறிக்கு எதிரான வாசகங்களை எழுதி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை