வேட்டி சட்டை அணிந்த அமலா
ஊரடங்கால் பொழுதுபோகாத நடிகைகள் சமூக வலைத்தளங்களில் உடற்பயிற்சி செய்வது தொடர்பாக சவால் விடுவது, அழகுக்
குறிப்புகளைப் பதிவிடுவது என நேரத்தைச் செலவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை அமலா பால் முதன்முறையாக வேட்டி சட்டை அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
தனது இரு சகோதரர்களுடன் அவர் வேட்டி சட்டை அணிந்து காட்சியளிக்கும் புகைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது
சகோதரர்களும் வேட்டி சட்டையுடன் உள்ளனர்.
ரசிகர்கள் இந்தப் படங்களைப் பரவலாகப் பகிர்ந்து வருகிறார்கள். வேட்டி
சட்டையில் அமலா அழகாக இருப்பதாகவும் பலர் பின்னூட்டமிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை