ஹஜ் புனிதப் பயணம் வெளிநாட்டினருக்கு இந்தாண்டு அனுமதி இல்லை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹஜ் புனித பயனத்துக்கு இந்தாண்டு வெளிநாட்டினருக்கு அனுமதி கிடையாது என சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் ஹஜ் பயணம் ரத்து செய்யப்படவில்லை என்றும் உள்நாட்டில் வசிப்பவர்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவர் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் இந்தாண்டு ஹஜ் புனிதப்பயணம் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
ஆண்டுதோறும் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தில் அதாவது ரமலான் பண்டிகை முடிந்த சுமார் 2 மாதங்களில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் நிகழ்வு உலகம் முழுவதும் நடைபெறும். கோடிக்கணக்கான வர்கள் சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் குவிவார்கள். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு ஹஜ் முழுமையாக ரத்து செய்யப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் வெளிநாட்டினருக்கு மட்டும் அனுமதி மறுத்துள்ளது சவுதி அரேபியா அரசு. உள்நாட்டில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு மக்கள் மற்றும் உள்நாட்டினர் குறைந்த எண்ணிக்கையில் குறிப்பிட்ட இடைவெளியில் ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை