ஜார்ஜ் பிளாய்ட்டைக் கொன்ற பொலிஸை விவாகரத்து செய்கிறார் மனைவி
"என்னை
கொல்லாதீங்க.. மூச்சு திணறுது" என்று கதறியும்கூட,, 10 நிமிஷத்துக்கு கறுப்பின
இளைஞரின் கழுத்திலேயே காலை மிதித்து கொன்ற பொலிஸ்காரருக்கு அவரது மனைவி தண்டனை தர போகிறார்..
இவ்வளவு மோசமாக ஒரு கொலையை செய்த கணவரை விவாகரத்துச் செய்ய போகிறாராம்
அமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் பிளாய்ட்.. வயசு 46 ஆகிறது.. கறுப்பின இளைஞரான இவர் கடந்த 27-ம் திகதி 20 டொலருக்கு கள்ள நோட்டு பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டதுடன், காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் தங்களது காலையும் அழுத்தி வைத்து இறுக்கினர்.
இதில் துடிதுடித்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார் ஜார்ஜ்.. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி இன்னமும் அதிர்ச்சி விலகாமல் உள்ளது.. இந்த சம்பவம் உள்நாட்டு பிரச்சனையாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது. ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன .
இந்நிலையில், கழுத்தை நெரித்து ஜார்ஜை கொன்ற அந்த போலீஸ்காரரின்
மனைவி அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.. இது தொடர்பாக அவருக்கு வக்கீல் நோட்டீசும்
அனுப்பியுள்ளார். தன்னுடைய கணவர் செய்த காரியம், தன்னை மனதளவில் அளவுக்கு அதிகமாக பாதித்துவிட்டதாகவும்,
அதனால் ஆழ்ந்த வேதனைக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் பிளாய்ட்.. வயசு 46 ஆகிறது.. கறுப்பின இளைஞரான இவர் கடந்த 27-ம் திகதி 20 டொலருக்கு கள்ள நோட்டு பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டதுடன், காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் தங்களது காலையும் அழுத்தி வைத்து இறுக்கினர்.
இதில் துடிதுடித்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார் ஜார்ஜ்.. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி இன்னமும் அதிர்ச்சி விலகாமல் உள்ளது.. இந்த சம்பவம் உள்நாட்டு பிரச்சனையாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது. ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன .
கருத்துகள் இல்லை