பிஸியான பிரியா
இப்போதைக்கு தமிழில் அதிக படங்கள் கைவசம் வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’, கமல்ஹாசனுடன் ‘இந்தியன்
-2’, ராகவா லாரன்ஸுடன் ஒரு படம், ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கும் பிரியா, அடுத்து விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். ‘அடங்கமறு’ இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.
கருத்துகள் இல்லை