நிர்வாணமாக ஆடிய அழகி மாஸ்க் அணியாததால் அபராதம்
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், மாடல் அழகி ஈவா மரியா தனது பிறந்த நாளுக்காக, கிராஸ்னோடரில் உள்ள கிராஸ்னோடர் உதைபந்தாட்ட
மைதானத்திற்கு வெளியே தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார்.
ஆடை எதுவும் இல்லாமல் பந்தை மட்டுமே பிடித்தபடி அவர் அந்த வீடியோவில் போஸ் கொடுத்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது பற்றி உள்ளூர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதை அவர் கடைபிடிக்காததால், அவருக்கு 347 டொலர் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஈவா மரியாவுக்கு நிர்வாணமாக நடனமாடியதற்காக தண்டனை எதுவும் விதிக்கப்படுமா..? என்பதை பொலிஸார் தெரிவிக்கவில்லை.
இது குறித்து மாடல் அழகி ஈவா மரியா பேசுகையில், “உடலை ஒரு கலை வடிவமாக கருதுவதால், மைதானத்திற்கு வெளியே நிர்வாண நடனத்தை அரங்கேற்றினர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என உண்மையாகஎனக்கு தெரியாது. நகர்புறங்களில் நிர்வாணமாக செல்வது எனக்கு பெரிய விஷயமல்ல,” என்றார்.
கருத்துகள் இல்லை