அசாஞ்சே மீது அமெரிக்கா புதிய குற்றச்சாட்டு பதிவு
பின்னர் அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 2012ம் ஆண்டில் தஞ்சம் அடைந்தார். ஆனால் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து இலண்டன் பொலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது அமெரிக்கா தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் வழக்கு இலண்டன் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அசாஞ்சே மீது அமெரிக்கா புதிய குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசிய மாநாடுகளில் இருந்து ரகசிய தகவல்களை திருடி அவரது விக்கிலீக்ஸ் நிறுவனம் மூலம் வெளியிட ஹேக்கர்களை நியமித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசாஞ்சேவின் வக்கீல் பாரி பொல்லாக் கூறுகையில் “இந்த புதிய குற்றச்சாட்டு அசாஞ்சேவுக்கு
மிகப்பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை காட்டுகிறது. இது மேலும் எல்லா இடத்திலும் பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலையும் பிரதிபலிக்கிறது” எனக் கூறினார்.
கருத்துகள் இல்லை