Friday, January 3.

கொரோனோவால் இறந்தவர்களின் சவப்பெட்டியில்போதைப்பொருள்

CAR
பிறேஸிலின் மடோக்ராஹோ டி சுலா மாகாணத்தில் பொன்டா போரா என்ற பகுதியில் பொலிஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்பொழுது  அவ்வழியாக வந்த காரை மறித்த பொலிஸார், கார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

அப்பொழுது அவர் தான் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய எடுத்துசெல்வதாக கூறியுள்ளார். இந்நிலையில்   அவரிடம் அடையாள அட்டையை காட்டும்படியும், உயிரிழந்தவர்களின் விவரங்களையும் பொலிஸார்  கேட்டுள்ளனர். அப்பொழுது அவர் தடுமாறியவாறுமுன்னுக்கு பின் முரணான பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் காரில் இருந்த இரண்டு சவப்பெட்டிகளையும் திறந்து பார்த்துள்ளனர். அதன் உள்ளே  290 கிலோ போதைப்பொருட்கள் இருந்துள்ளது. அதனை தொடர்ந்து பொலிஸார் அந்த கார் டிரைவரை கைது செய்துள்ளனர். மேலும் இவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

கருத்துகள் இல்லை

Post Top Ad

Post Bottom Ad