மாஸ்கோவில் ராஜ்நாத் சிங் சீனப் பிரதிநிதியுடன் சந்திப்பு இல்லை - பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்று உள்ளார். மாஸ்கோவில் இன்று நடைபெறும் வெற்றி நாள் அணிவகுப்பில் கலந்து கொள்ளும் தனது சீனப் பிரதிநிதியை மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்துபேசுவார் என்று சீன குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இருவருக்கும் இடையில் எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை