Tuesday, April 29.
  • Breaking News

    பூமி மீது விழுந்த நிலவின் நிழல்

     

    சூரிய கிரஹணத்தின்போது  பூமியின் மீது விழுந்த நிலவின் நிழலை  விண்வெளி வீரர் ஒருவர்  படம் பிடித்து அனுப்பியுள்ளார்.

    சூரியனுக்கும்  பூமிக்கும் இடையே நிலவு வரும்போது  சூரிய கிரஹணம்ஏற்படுகிறது.கடந்த  21 ஆம் திகதி   நிகழ்ந்த சூரிய கிரஹணத்தை     விசேஷ கண்ணாடி அணிந்தும்  தொலைநோக்கியிலும் கண்டு ரசித்தனர்.பூமியிலிருந்து சூரியனைப் பார்த்தபோது  நிலவால் மறைக்கப்பட்ட சூரியன்  'நெருப்பு வளையம்' போல காட்சி அளித்தது.

    அதே நேரத்தில்  சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பூமியைப் பார்த்தபோது  நிலவின் நிழல்  பூமி மீது விழுந்தது தென்பட்டது. அதை கிறிஸ் காசிடி என்ற 'நாஸா' விண்வெளி வீரர் படம் பிடித்து  'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளார்.பூமியில் இருந்து வெகு தொலைவில் நிலவு இருந்ததால்  அதன் நிழல் பூமியின் சிறிய பகுதியில் மட்டும் விழுந்ததை  நாஸா வீரரின் புகைப்படம்  தெளிவாக விளக்குகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad