ஹொண்டுராஸ் நாட்டு ஜனாதிபதிக்கு கொரோனா
மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஜூவான் ஆர்லண்டோ ஹெர்னாண்டஸ் (வயது 51). கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளால் அவதிப்பட்டார். இதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை நாட்டு மக்களுக்கு அவர் தொலைக்காட்சியில் அறிவித்தார். அப்போது அவர், “ நான் சில அசவுகரியங்களை உணரத்தொடங்கினேன்; இப்போது எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தேசத்தின் தலைவர் மற்றும் பொறுப்பு வாய்ந்த குடிமகன் என்ற வகையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். டாக்டர்கள் ஓய்வு எடுக்க பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் நான் எனது உதவியாளர்கள் மூலம் தொலைவில் இருந்து பணியாற்றுவேன். இப்போது சிகிச்சை தொடங்கி உள்ளது. நான் நன்றாக உணர்கிறேன்” என கூறினார்.
அந்த நாட்டில் 9,656 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதுவரை 330 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 1,075 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
கருத்துகள் இல்லை