இனி சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்த மாட்டேன் சாக்ஷி
எல்லைப் பகுதியில் சீனாவுடனான மோதலையடுத்து சீனத் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் எனும் முழக்கம் வலுத்து வருகிறது.
இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் ‘டிக்டாக்’
கணக்கில் இருந்து விலகி உள்ளார். இத்தனைக்கும்
அவரை 2.18 லட்சம்
பேர் டிக்டாக்கில் பின்தொடர்ந்தனர். அது ஒரு சீனத் தயாரிப்பு என்பதால் டிக்டாக் கணக்கை அகற்றி
விட்டார்.
தமக்கு தாய்நாடுதான் முக்கியம் என்றும் ஒரு பொறுப்புள்ள குடிமகளாக செயல்பட்டிருப்பதாகவும் சாக்ஷி விளக்கம் அளித்துள்ளார்.
“பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக உள்ள இந்தியாவின் தன்மையை சீனா தனக்குச் சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறது. இனி
சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்த மாட்டேன். அதுதொடர்பான
விளம்பரங்களிலும் நடிக்கமாட்டேன். இதன்
தொடக்கமாக டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன்,” என்கிறார்
சாக்ஷி.
கருத்துகள் இல்லை