• Breaking News

    வந்தே பாரத் மூலம் ஒரு இலட்சம் இந்தியர் நாடு திரும்புவர்


    கொரோனாவால் வெளியேற முடியாது  வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தை இந்தியா நடைமுறைப்படுத்துகிறது. மே மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கபட்ட இத்திட்டம் ஜூன் 13ஆம் திகதி வரை நடைபெறும். இத் திட்டம் நிறைவடையும்போது 107,000 இந்தியர்கள் தாய் நாட்டுக்குத் திரும்புவார்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

    விமானங்கள், கப்பல்கள் மூலன் 22 நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைட்துவரும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள், பிரத்தியேகத் தேவைக்காகச் சென்றவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். 348,565 பேர்  இந்தியாவுக்குத் திரும்புவதற்காகப் பதிந்துள்ளனர்.

    நேபாளம்,பூட்டான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள 32,000 பேர் நாடு திரும்புவதற்காக எல்லையில் பிரத்தியேக அரண்கள் அமைக்கபப்ட்டுள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad