• Breaking News

    .. தென் கொரியாவுக்கு கிம் ஜோங் உன் தங்கை எச்சரிக்கை

     

    தென் கொரியாவிற்கு எதிராக இராணுவ ரீதியான நடவடிக்கையை எடுக்க போகிறேன் என்று வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் தங்கை கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார். 

    தென்கொரியாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த வருடம்தான் இரண்டு நாட்டு ஜனாதிபதிகளும்  பேச்சுவார்த்தை நடத்தினார்கள், இருவரும் ஒன்றாக எல்லைகளை கடந்து நட்பை வெளிப்படுத்தினார்கள். ஆனால் தற்போது கடந்த ஒரு மாதமாக வடகொரியா  தென்கொரியா ஆகியவற்ருக்கு இடையே    மிக தீவிரமாக சண்டை நடந்து வருகிறது. இப்போது இந்த பிரச்சனை போராக மாற வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். 

    வடகொரியாவின் சக்தி வாய்ந்த பெண்ணும், கிம் ஜோங் உன்னிங் தங்கையுமான கிம் யோ ஜோங் தென் கொரியாவை கடுமையாக எச்சரித்து இருக்கிறார். அதில் , தென் கொரியாவிற்கு எதிராக வடகொரியா கடுமையான நடவடிக்கை எடுக்க போகிறது. நாங்கள் இராணுவ ரீதியான நடவடிக்கையை எடுக்க போகிறோம். தென் கொரியாவுடன் மொத்தமா உறவை துண்டிக்கும் நேரம் வந்துவிட்டது.   தென்கொரியாவிற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கும் நேரம் இதுதான்.


    வடகொரியாவின் ராணுவத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் என்னிடம் இருக்கிறது. என்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு நான் வடகொரியா ராணுவத்திற்கு உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறேன். இது தொடர்பான வழிகாட்டுதல்களை நான் வடகொரியாவிற்கு அனுப்பி உள்ளேன். 

     அடுத்து என்ன செய்ய வேண்டும் எப்படி ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறேன். தென் கொரியா எங்களின் எச்சரிக்கையை மதிக்கவில்லை. அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, என்று கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார். 

     இந்த அனைத்து பிரச்சனையாக்கும் பலூன்கள் காரணம் என்றால் நம்புவீர்களா? பலூன்கள் போராட்டம் வடகொரியாவில் இருந்து தென் கொரியாவிற்கு கடத்தப்பட்ட உளவு தகவல்கள் மற்றும் கோப்புகள்தான் இந்த சண்டைக்கு காரணம். வடகொரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் சிலர், தென் கொரியாவிற்கு பலூன்கள் மூலம் எல்லையில் இருந்து இந்த கோப்புகளை அனுப்புகிறார்கள். ஹீலியம் பலூன்கள் மூலம் அவர்கள் கோப்புகளை எல்லைக்கு கடத்துகிறார்கள். 

     இப்படி தினமும் பல நூறு கோப்புகள் எல்லையில் கடத்தப்படுகிறது. இரவு நேரத்தில் இப்படி பலூன்கள் பறப்பதால் அதை தடுக்க முடியவில்லை. இதை வடகொரியா மிக கடுமையாக எதிர்த்து வந்தது. இதுதான் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட காரணம் ஆகும். தென் கொரியா மீது வடகொரியா இவ்வளவு கோபத்தில் இருக்க இதுதான் காரணம்.

     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad