ஊரடங்கில் புகைப்படக்காரராக மாறிய மெகாஸ்டார் மம்முட்டி
மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. தற்போது ஊரடங்கு சமயத்தில் பிரபலங்கள் பலரும் தங்களது திறமைகளை சமூக ஊடகத்தின் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர்.
ஊரடங்கு நேரத்தில், மோலிவுட்டின் மெகாஸ்டார் மம்முட்டி தனக்கு பிடித்தமான செயல்களை செய்வதில் தன்னுடைய நேரத்தை செலவிட்டு வருகிறார். இவர் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஊரடங்கு காலத்தில் அவர் புகைப்படம் எடுத்த படங்களை தற்போது சமூக ஊடங்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
மம்முட்டி தனது வீட்டின் முன் இருந்து கிளிக் செய்யும் படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் மம்முட்டி கடைசியாக ‘ஷைலாக்’ படத்தில் நடித்திருந்தார். இது ஒரு பிளாக்பஸ்டராக திரைப்படமாக திரையில் வெற்றி கண்டது. அவர் அடுத்ததாக ‘ஒன்’ என்ற அரசியல் த்ரில்லரில் நடிக்க இருக்கிறார் என தெரிகிறது.
கருத்துகள் இல்லை