லாஸ்லியாவின் ஜோடி ஹர்பஜன்
பிக்பொஸ்ஸில் அரிமுகமான லாஸ்லியாவின் முதல் படமான
பிரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.
இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா நட்போடு இணைந்து இயக்கி இருக்கும்
படம் பிரண்ட்ஷிப் இந்த படத்தில் ஹீரோவாக முன்னாள் இந்திய
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
கல்லூரி கதையை மையப்படுத்தி உருவாகி உள்ள பிரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
லாஸ்லியா, ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனது மட்டுமின்றி இரு படங்களில் நடித்தும் வருகின்றனர். சந்தானத்தின் டிக்கிலோனா மற்றும் பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங்கும், பிரண்ட்ஷிப் மற்றும் நடிகர் ஆரியின் பெயிரிடாத படத்தில் லாஸ்லியாவும் நடித்து வருகிறார்.
கருத்துகள் இல்லை