சாந்தனுவின் ஒளிப்பதிவாளர்
பாக்யராஜின் மகனும், பிரபல நடிகருமான சாந்தனு வீட்டில் இருந்தபடியே கொஞ்சம் கொரோனோ கொஞ்சம் காதல் என்ற குறும்படத்தை எழுதி அதனை இயக்கி வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த குறும்படத்தில் அவரது மனைவி கீர்த்தியும் நடித்துள்ளார். இந்த குறும்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தத. மேலும் பல பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணுடன் இருந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சாந்தனு, இவர்தான் யுவஸ்ரீ. எங்கள் வீட்டில் தங்கியிருந்து பணிபுரியும் பெண். இவர்தான் எங்களது குறும்படத்தின் ஒளிப்பதிவாளர்.
எல்லா இடங்களிலும் திறமையானவர்கள் உள்ளனர். நாம்தான் அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தற்போது அவருக்கு லைக்குகளை அள்ளிகொடுத்து அவர் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுவோம் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஒளிப்பதிவாளர் யுவஸ்ரீக்கும்,
அவரது திறமையை வெளியுலகிற்கு தெரிய வைத்த சாந்தனு மற்றும் கீர்த்தி ஜோடிக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
கருத்துகள் இல்லை