சீனாவின் மிரட்டலுக்கு பணியப்போவதில்லை அவுஸ்திரேலிய பிரதமர்
சீனா
- அவுஸ்திரேலியா இடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலம் ஆண்டொண்றுக்கு 18 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது. அவுஸ்திரேலியாவில் இருந்து
மாட்டு இறைச்சி, பார்லி ஆகியவற்றை சீனா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.இந்நிலையில்
'கொரோனா' தொற்று விவகாரத்தில் சீனா அலட்சியமாக
செயல்பட்டதால் தான் இன்று உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா சமீபத்தில் குற்றம்சாட்டியது.'இது
தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை' என அவுஸ்திரேலிய
அரசு வலியுறுத்தியது.
இதையடுத்து
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் இருந்து
மாட்டு இறைச்சி இறக்குமதிக்கு சீனா தடை விதித்தது.
பார்லி இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கப்பட்டது.
மேலும் 'அவுஸ்திரேலியாவில் ஆசியர்கள் மீது குறிப்பாக
கிழக்காசியர்கள் மீது இனவெறி தாக்குதல்கள்
நடப்பதால் அங்கு சென்று படிப்பதை சீன மாணவர்கள் தவிர்க்க வேண்டும்' என சீனா தெரிவித்தது. சீன சுற்றுலா பயணியரும் அவுஸ்திரேலியா செல்வதை தவிர்க்க வேண்டுமென சீன அரசு கேட்டுக் கொண்டது.
சீனாவின்
நடவடிக்கை குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது
''நாங்கள் வெளிப்படையாக வர்த்தகம் மேற்கொள்ளும் நாட்டைச்
சேர்ந்தவர்கள்.எனவே தேவையற்ற மிரட்டல் மற்றும்
வற்புறுத்தல்களுக்காக எங்கள் மதிப்பை நாங்கள்
விற்க தயாராக இல்லை '' என்றார்
கருத்துகள் இல்லை