ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தில் ஷ்ருதி
ரஜினி, கமல் இணைந்து நடித்து 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘அவள்
அப்படித்தான்’ படத்தை
மறுபதிப்பு செய்யத் திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். இவர்
‘பாணா காத்தாடி’ படத்தை
இயக்கியவர்.
ஸ்ரீபிரியா நாயகியாக நடித்த ‘அவள்
அப்படித்தான்’ பெரும்
வரவேற்பைப் பெற்றது. இதில்
வாழ்க்கையில் விரக்தி அடைந்திருக்கும் ஸ்ரீபிரியா மீது கமல்ஹாசனுக்கு காதல் உண்டாகும். கதைப்படி ரஜினி விளம்பர நிறுவனம் நடத்துபவராகவும் கமல்ஹாசன் ஆவணப் பட இயக்குநராகவும் நடித்திருந்தனர். ரஜினி
அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக வருவார் ஸ்ரீபிரியா.
இப்படத்தின் பாடல்கள் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன. ஸ்ரீபிரியாவின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டதுடன், அவருக்கு தமிழக அரசின் விருதையும் பெற்றுத் தந்தது.
ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் சிம்புவையும் ஸ்ரீபிரியா வேடத்தில் ஷ்ருதி ஹாசனையும் நடிக்க வைப்பதுதான் தனது திட்டம் என்கிறார் பத்ரி வெங்கடேஷ். கமல்
கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறாராம்.
“கதையின் ஜீவன் கெடாமல் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்து திரைக்கதையை உருவாக்கி உள்ளேன். மறுபதிப்புக்கும் இளையராஜா இசையமைத்தால் பெரும் பலமாக அமையும்.
“அனைத்துமே தற்போது தொடக்க நிலையில்தான் உள்ளது. ஊரடங்கு முடிந்தபிறகு எனது முயற்சிகளைத் தொடங்குவேன்,” என்கிறார் பத்ரி வெங்கடேஷ்.
கருத்துகள் இல்லை