• Breaking News

    நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு தலைவராக கேத்தி லூதர்ஸ் நியமனம்

    நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்க்குத் தலைவராக கேத்தி லூதர்ஸ் என்ற பெண் விஞ்ஞானி நாஸா நியமித்துள்ளது.

     2024 ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கு நாஸா தயாராகி வருகிறது. இந்த முறை விண்வெளி வீரர்களை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நாஸா திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களை நாடி உள்ளது. நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாஸாவின் புதிய திட்டத்திற்குஆர்ட்டிமிஸ்எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

    2024–ம் ஆண்டில்ஆர்ட்டிமிஸ் 1’ விண்கலம் நாசாவின் ஓரியன் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, முதல் பெண் நிலவில் கால் பதிப்பார் இந்த நிலையில் நாஸா அதிகாரி ஒருவர் மனித விண்வெளிப் பயணதிட்டத்தின் முதல் பெண் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 

    நாஸாவின் மனித ஆய்வு மற்றும் செயல்பாட்டு மிஷன் இயக்குநரகத்தை வழிநடத்த கேத்தி லூதர்ஸ் என்ற பெண் விஞ்ஞானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்  என்று நாஸாவின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் தனது டுவிட்டரில் அறிவித்து உள்ளார். 

    மேலும் அவர் கூறும் போது "கேத்தி வணிக விண்வெளி விமான திட்டங்களை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார், மேலும் 2024 ஆம் ஆண்டில் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப நாங்கள் தயாராகும் போது இதனை வழிநடத்த சரியான நபர் என கூறி உள்ளார். 

    1992 இல் நாஸாவில் சேர்ந்த லூதர்ஸ், மே 30 அன்று இரண்டு விண்வெளி வீரர்களை ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதை மேற்பார்வையிட்டார். 

    ஸ்பேஸ்எக்ஸ், போயிங் மற்றும் நாஸாவுடன் கூட்டு சேர்ந்துள்ள பிற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட விண்வெளி காப்ஸ்யூல்களுக்கான முழுமையான சோதனை திட்டத்தின் பொறுப்பில் பல ஆண்டுகளாக அவர் மனிதர்களை பாதுகாப்பாக விண்வெளியில் கொண்டு செல்லக்கூடிய விண்கலங்களை உருவாக்கினார். 

    நாஸாவிற்கான வணிக விண்வெளி விமான திட்டங்களை உருவாக்கும் திட்டம் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்டது, இது முன்னர் தனது சொந்த ரொக்கெற்றுகள் மற்றும் விண்வெளி வாகனங்களை வடிவமைத்து உருவாக்கிய விண்வெளி நிறுவனத்திற்கு வியத்தகு மாற்றத்தை குறிக்கிறது. 

    ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட நாஸாவின் திட்ட அட்டவணை, 2024 ஆம் ஆண்டில் கனரக எஸ்.எல்.எஸ் ரொக்கெற் மற்றும் ஓரியன் காப்ஸ்யூலைப் பயன்படுத்தி முதல் பெண் உட்பட இரண்டு விண்வெளி வீரர்களை நிலவில் சிலநாட்கள் தங்க வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad