அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிடியாணை பிறப்பித்தது ஈரான்
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்கெனவே உறவுகள் படுமோசமான நிலைக்கு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு சென்று விட்டது, இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது ஈரான். மேலும் இண்டெர்போலுக்கு தொலைபேசி செய்து ட்ரம்ப்பை கைது செய்ய உதவி கோரியது.
ஈரானின் முதன்மை ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்தான் காரணம் அவர்தான் குற்றவாளி என்று
குற்றம் சாட்டிய ஈரான்,
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஜனவரி 3 ஆம் திகதி
காசிம் சுலைமானி கொலைக்குக் காரணமான ட்ரோன் தாக்குதலுக்கு ட்ரம்ப் உட்பட 30 பேர் மீது
பிடியாணை குற்றச்சாட்டு
எழுப்பியதாகவும் பிடியாணையில் குறிப்பிடப்பட்ட இவர்கள் மீது கொலை மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் டெஹ்ரான் வழக்கறிஞர் அலி அல்குவாசிமெர் தெரிவித்தார்.
வழக்கறிஞர் அலி அல்குவாசிமெர் மேலும் தெரிவிக்கும் போது, ஜனாதிபதி பதவி பறிபோனாலும் டர்மப் அவர் மீது டெஹ்ரான் விசாரணை மேற்கொள்ளும் என்றார்.
இந்த பிடியாணை பற்றி உலக பொலிஸ் அமைப்பான இண்டர்போல் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
கருத்துகள் இல்லை