மக்களைப் பிரித்தாளும் ஜனாதிபதியைக் கண்டதில்லை- முன்னாள் ராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ்
மக்களை ஒன்று சேர்க்கப் பாடுபடாது பிரித்தாளும் ஒர்
அமெரிக்க ஜனாதிபதியை முதன்
முதலாக ட்ரம்ப் ரூபத்தில் சந்திக்கிறேன் என்று
முன்னாள் ராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்தார்.
சிஎன்என் தொலைக்காட்சியில் ட்ரம்ப்
பற்றிக் கூறும்போது, “அமெரிக்க மக்களை ஒன்றிணைக்காமல் தோல்வையடைந்த , என் வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்தான்.
மக்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சி போல் பாசாங்கு கூட செய்யவில்லை ட்ரம்ப். மாறாக மக்களை பிரிக்க அவரே முயற்சிக்கிறார். இவரது இத்தகைய 3 ஆண்டுகால விளைவுகளைத்தான் இப்போது பார்க்கிறோம். 3 ஆண்டுகளாக ஒரு முதிர்ச்சியற்ற தலைமையின் செயல்களைப் பார்த்து வருகிறோம். அவர் இல்லாமலேயே நாம் ஒற்றுமையுடன் இருப்போம், நம் சிவில் சமூகத்தின் வலுவான தன்மையினால் நாம் ஒற்றுமையுடன் இருப்போம்” என்றார்.
கருத்துகள் இல்லை