மரத்தாலான உருவபொம்மையுடன் இளைஞருக்கு வினோத திருமணம்
உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவருக்கு மரத்தாலான உருவபொம்மையுடன் வினோத திருமணம் நடைபெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் வசித்து வந்தவர் ஷிவ் மோகன். 90 வயது நிறைந்த இவருக்கு மொத்தம் 9 ஆண்பிள்ளைகள். இதில் எட்டு மகன்களுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்நிலையிலேயே அவர் தனது கடைசி மகனுக்கு மரத்தாலான பொம்மையுடன் வினோத திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
இந்த திருமணத்தில் மரத்தாலான உருவ பொம்மைக்கு மணப்பெண் போன்ற அலங்காரம் செய்யப்பட்டு, அதனருகில் மணமகன் அமர்ந்து சடங்குகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மணமகனின் தந்தை ஷிவ் மோகன் கூறுகையில், நான் இறப்பதற்கு முன்பு எனது 9 மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். எட்டு மகன்களுக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் கடைசி மகனிடம் எந்த சொத்தும் இல்லை. மேலும் அவன் அறிவாளியாகவும் இல்லாமல் இருந்தான். அதனாலேயே இத்தகைய திருமணத்தை செய்ய நேரிட்டது என கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை