பெரு நகரங்களை விட்டுச் செல்லும் அவுஸ்திரேலிய மக்கள்
கொரோனா கிருமிப் பரவலுக்கு மத்தியில் வீட்டிலிருந்து வேலை செய்வது வழக்கமாகி விட்டதால் அவுஸ்திரேலிய மக்கள் நகரங்களிலிருந்து வட்டார பகுதிகளுக்குக் குடிபெயரத் தொடங்கியுள்ளனர். நெரிசல் மிக்க மத்திய வர்த்தக பகுதிகளிலிருந்து வெளியேறி வட்டார பகுதிகளில் விலை குறைவான சொத்துகளை வாங்குவதற்கும் அவர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
சிட்னிக்கு அருகில் உள்ள சதர்ன் ஹைலேண்ட்ஸ் வட்டாரப் பகுதியில் சொத்துகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை ஏற்கெனவே பெருமளவு அதிகரித்துள்ளதாக அங்குள்ள சொத்து முகவர்கள் கூறுகின்றனர். வீடு
வாங்க இயலாத நிலை, அதிகரித்து வரும் நெரிசல் போன்ற காரணங்களால் சிட்னி, மெல்பர்ன் போன்ற பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் வட்டாரப் பகுதிகளை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் வட்டாரப் பகுதிகளுக்கு மக்கள் செல்வதை ஏற்கெனவே ஊக்குவித்து வந்த நிலையில், கொவிட்-19
காரணமாக வட்டாரப் பகுதிகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. வட்டாரப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட இணையச் சேவை கிடைப்பதால் மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை மேலும் எளிதாக்கியுள்ளதும் அதற்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை