பங்களாதேஷ் பாதுகாப்பு செயலாளர் கொரோனாவுக்கு பலி
பங்களாதேஷின் பாதுகாப்புத்துறை செயலாளர் அப்துல்லா அல் மோசின் சவுத்ரி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு டாக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பங்களாதேச மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக சவுத்ரி டாக்காவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கடந்த 29 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜூன் 6 ஆம் திகதி அவரது உடல்நிலை மிகவும் மோசமாக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
ஜூன் 18 ஆம் திகதி மேலும் உடல்நிலை மோசமாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
கருத்துகள் இல்லை