ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்குகிறது
உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து பரிசோதனைகள் முடித்து சந்தைக்கு கொண்டு வருவதில் பல நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
ரஷ்யாவில் உள்ள பிரபல மருந்து நிறுவனங்களான பயோகாட் மற்றும் ஜெனிரியம் ஆகியவை கூட்டாக தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசிகளை பரிசோதிப்பது இந்த மாதம் தொடங்கி விடும்.
இந்த தகவலை மாஸ்கோவில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று பதிலளிப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய தொழில், வர்த்தக மந்திரி டெனிஸ் மாண்டுரோவ் கலந்து கொண்டு பேசும்போது தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை