ராதிகா ஆப்தேவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்த ராதிகா ஆப்தேவுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது இயக்குனராகி இருக்கிறார்.
அவர் இயக்கிய குறும்படம் சர்வதேச குறும்பட விழாவிற்கு தேர்வாகி இருக்கிறது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஹஹநான் எழுதி இயக்கிய குறும்படம் பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச குறும்பட விழாவில் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி" என்று இதில் பணியாற்றிய அனைவரையும் டேக் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை