பாங்களாதேஷின் முன்னாள் அமைச்சர் மரணம்
பங்களாதேஷின் முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி முகமது நாசீம். இவர் ஆளும் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவரும் ஆவார். 72 வயதான முகமது நாசீமுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் காலமானார்.
.அவருக்கு கடந்த 2ஆம் திகதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே கடந்த ஐந்தாம் திகதி முகமது நாசீமுக்கு பக்கவாதம் ஏற்பட்டது எனவே மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். அதன்படி அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. அவர் உடல்நிலை தேறி வருவதாக கூறிய மருத்துவர்கள் விரைவில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் எனக் கூறினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது நாசீமின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர் எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. வங்காளதேச அதிபர் அப்துல் ஹமீத் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியுறவு மந்திரி அப்துல் மோமன் ஆகியோர் முகமது நாசீமின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை