• Breaking News

    தென் கொரியாவின் பொது தகவல் தொடர்பு அலுவலகத்தைத் தகர்த்தது வடகொரியா

    \

    வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமான பொது தகவல் தொடர்பு அலுவலகம் வடகொரியாவின் கேசோங் நகரில்  2018ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையிலான விரிசல் மேலும் மோசமடைந்ததில் அந்தப் பொது தகவல் தொடர்பு அலுவலகத்தை வடகொரோயா தகர்த்துள்ளது.

    வடகொரியாவிலிருந்து தப்பித்துச் சென்றவர்கள் அண்மையில் தென்கொரிய எல்லையிலிருந்து வடகொரிய ஆட்சிக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வீசுவதையும் பிரசார வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்களை அனுப்பியதை வடகொரியா கடுமையாகச் சாடியது.

    தென்கொரிய மற்றும் வட கொரிய எல்லையில் உள்ள  இராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய தனது  இராணுவம் தயாராக இருப்பதாக வடகொரியா எச்சரித்திருந்த சமயத்தில் பொது தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது.

    வடகொரியாவிலிருந்து தப்பி ஓடியவர்களுக்கும் அவர்களுக்கு அடைக்கலம் தந்துள்ள தென்கொரியாவுக்கும் தக்க பதிலடி கொடுக்க பொது தகவல் தொடர்பு அலுவலகத்தைத் தகர்த்திருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழையத் தனது  இராணுவம் தயாராக இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

    வடகொரியாவின்  இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்காவுடன் இணைந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தென் கொரிய  இராணுவம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவுடனான அணுவாயுதப் பேச்சுவார்த்தை முடங்கியிருக்கும் இவ்வேளையில் தென்கொரியாவுக்கு நெருக்குதல் தர வடகொரியா இத்தகைய செயல்களில் இறங்கியிருக்கலாம் என்று தென்கொரியா கூறியது

    1950களில் நடந்த கொரியப் போரின்போது வடகொரியாவும் தென்கொரியாவும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதி உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad