• Breaking News

    ‘141 கொரோனா தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சி’

      உலக நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக 141 தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸஸ் கூறியுள்ளார்.

    தடுப்பூசி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் சிலர் இன்னும் ஒரு சில மாதங்களில் அதில் வெற்றியடையக் கூடும். ஆனால் முழுமையான பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, என்றாலும் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றும்தி வாஷிங்டன் போஸ்ட்நாளிதழுக்காக அவர் எழுதிய ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.

    இதற்கிடையே, உலக அளவில் கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் 160,000 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் உலகளவில் கொரோனா கிருமித்தொற்று பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக அமைப்பு எச்சரித்துள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad