• Breaking News

    ஹோப் விண்கலம் 15 ஆம் திகதி நள்ளிரவு விண்ணில் ஏவப்படுகிறது

    செவ்வாய் கிரகம் நோக்கி ஹோப் விண்கலம் வருகிற 15-ந்தேதி நள்ளிரவு விண்ணில் ஏவப்பட இருப்பதாக துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. 

    அமீரக ஜனாதிபதி  ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் வழிகாட்டுதலில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. இதில், முதல் முறையாக முற்றிலும் அமீரகத்தில் உருவாக்கப்பட்ட விண்கலம் ஒன்றை இந்த ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டது.   

    இதற்காக ஹோப் என்ற விண்கலத்தை உருவாக்கும் பணியானது கடந்த 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 200 அமீரக பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பெரும் முயற்சியால் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தின் சார்பில் இந்த விண்கலம் உருவாக்கப்பட்டது.

    இந்த விண்கலம் ஜப்பான் நாட்டின் டனகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஹெச்2 என்ற ராக்கெட் மூலம் வருகிற 15 ஆம்திகதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.  


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad