• Breaking News

    2036 ஆம் ஆண்டுவரை ரஷ்யாவின் ஜனாதிபதியாக புட்டின் தொடர மக்கள் ஆதரவு

     ரஷ்யாவின்  ஜனாதிபதியாக   புட்டின் 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிப்பதற்கு  வாக்கெடுப்பு  நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

    ரஷ்யாவில் ஜனாதிபதி  பதவியில் இருப்பவர், தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. இந்த நிலையில் புட்டின் ரஷ்யாவில் செல்வாக்கு மிக்க நபராகத் தொடர்வதால், அவரை அதிபர் பதவியில் மேலும் தொடர வைப்பதற்கான சட்டத் திருத்தத்திற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

    இந்த நிலையில் மக்களது விருப்பத்தை அறிய இது தொடர்பான வாக்கெடுப்பு  கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் நடந்தது. இதில் 77.93% பேர் ரஷ்ய அதிபராக  புட்டின் 2036  ஆம் ஆண்டுவரை தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 21.6% பேர் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்ததாகவும்  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து 2036 ஆம் ஆண்டுவரை ரஷ்யாவின்  ஜனாதிபதியாக புட்டின் தொடர இருக்கிறார் என்றும்  தேர்தல்  ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், இந்த  வாக்கெடுப்பு பொய்யானது என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

    கடந்த 1999-ல் அப்போதைய ரஷ்ய  வாக்கெடுப்பு  போரிஸ் எல்ட்சின், அன்றைய பிரதமர் செர்ஜி ஸ்டாபாசினை பதவி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபியின் முன்னாள் உளவாளி விளாடிமிர் புதினை பிரதமராக அவர் நியமித்தார்.

    1999 டிசம்பரில் போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது செயல் அதிபராக புட்டின் பொறுப்பேற்றார்.

    2008-ல் பிரதமராகப் பதவியேற்றார் புதின். பின்னர் 2010 மார்ச்சில் நடந்த ஜனாதிபதித்  தேர்தலில்  புட்டின்  வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் மீண்டும்  ஜனாதிபதியானார் . 4-வது முறையாக ரஷ்யாவின்  ஜனாதிபதியான  புட்டினின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு முடியும் நிலையில், தற்போது இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad