• Breaking News

    மழை, நிலச்சரிவு, வெள்ளம்: ஜப்பானில் 34 பேர் மரணம்

    ஜப்­பா­னின் தென் பகுதி தீவான கியூ­ஷு­வில் பெய்த பெரு­­ழைக்­கும் வெள்­ளத்­திற்­கும் 34 பேர் மாண்டனர் அல்லது மாண்டதாக அஞ்சப்படுகிறது. மேலும் 14 பேரைக் காண­வில்லை என்று தெரி­வித்­துள்ள மீட்­புப் படை­யி­னர் அவர்­­ளைத் தேடும் பணி­யில் தீவி­­மாக ஈடு­பட்­டுள்­­னர்.

    இத்­தீ­வின் மத்­திய குமா­மோட்டோ வட்டாரத் தில் சனிக்­கி­ழமை திடீ­ரென வெள்­ளம் ஏற்­பட்­டது. ஆங்­காங்கே நிலச்­­ரி­வு­களும் நிகழ்ந்­தன. கார்­கள் தலை­குப்­பு­றக் கவிழ்ந்து கிடப்­­தை­யும் குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­­ளது வீட்­டி­லி­ருந்து சேறு சக­தியை வெளி­யேற்­று­­தை­யும் தொலைக்­காட்­சி­யில் ஒளி­­ரப்­பான படங்­கள் காட்­டின.

    வெள்­ளம் சூழ்ந்த பகு­தி­களில் சிக்­கிக்­கொண்­­வர்­களை ராணு­வத்­தி­னர் பட­கு­களில் சென்று மீட்­­தை­யும் தொலைக்­காட்­சி­யில் காண­மு­டிந்­­தாக ராய்ட்­டர்ஸ் செய்­தி­யா­ளர் தெரி­வித்­தார்.

    மின்­சா­ரம் தடைப்­பட்டு இருட்­டில் தவித்­­தா­­வும் குடிக்­கத் தண்­ணீர் இல்லை என்­றும் மீட்­கப்­பட்ட ஒரு பெண் தொலைக்­காட்சி செய்­தி­யா­­ரி­டம் தெரி­வித்­தார். நிலைமை மிக­வும் மோச­மாக இருந்­­தா­­வும் அவர் சொன்­னார்.

    200,000க்கும் மேற்­பட்ட மக்­கள் தங்­­ளது வீட்டை விட்டு வெளி­யேறி அவ­­­கால முகாம்­களில் தங்­கு­மாறு அதி­கா­ரி­கள் உத்­­­விட்­­னர்.

    கொரோனா கொள்­ளை­நோய் பர­­லைத் தடுக்­கும் முயற்­சி­யாக அவர்­கள் அனை­­ரும் சமூக இடை­வெ­ளி­யைப் பின்­பற்­று­மா­றும் கைக­ளைக் கழு­வு­மா­றும் கேட்­டுக்கொள்­ளப்­பட்­­னர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad