மழை, நிலச்சரிவு, வெள்ளம்: ஜப்பானில் 34 பேர் மரணம்
ஜப்பானின் தென் பகுதி தீவான கியூஷுவில் பெய்த பெருமழைக்கும் வெள்ளத்திற்கும் 34 பேர் மாண்டனர் அல்லது மாண்டதாக அஞ்சப்படுகிறது. மேலும் 14 பேரைக் காணவில்லை என்று தெரிவித்துள்ள மீட்புப் படையினர் அவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இத்தீவின் மத்திய குமாமோட்டோ வட்டாரத் தில் சனிக்கிழமை திடீரென வெள்ளம் ஏற்பட்டது. ஆங்காங்கே நிலச்சரிவுகளும் நிகழ்ந்தன. கார்கள் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடப்பதையும் குடியிருப்பாளர்கள் தங்களது வீட்டிலிருந்து சேறு சகதியை வெளியேற்றுவதையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்கள் காட்டின.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிக்கொண்டவர்களை ராணுவத்தினர் படகுகளில் சென்று மீட்பதையும் தொலைக்காட்சியில் காணமுடிந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர் தெரிவித்தார்.
மின்சாரம் தடைப்பட்டு இருட்டில் தவித்ததாகவும் குடிக்கத் தண்ணீர் இல்லை என்றும் மீட்கப்பட்ட ஒரு பெண் தொலைக்காட்சி செய்தியாளரிடம் தெரிவித்தார். நிலைமை
மிகவும் மோசமாக இருந்ததாகவும் அவர் சொன்னார்.
200,000க்கும்
மேற்பட்ட மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறி அவசரகால முகாம்களில் தங்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
கொரோனா கொள்ளைநோய் பரவலைத் தடுக்கும் முயற்சியாக அவர்கள் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் கைகளைக் கழுவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
கருத்துகள் இல்லை