போட்ஸ்வானாவில் 350க்கும் மேலான யானைகள் மர்ம மரணம்
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் நூற்றுக்கணக்கான யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.குறிப்பாக அவை நீர்நிலைகளுக்கருகே இறந்து விழுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
போட்ஸ்வானா நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில்தான் இந்த மர்ம மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மே மாதத்தில்தான் முதன்முறையாக இந்த அசாதாரண மரணங்கள் நிகழத் தொடங்கின. அப்போது குறைந்த கால இடைவெளிக்குள் 169 யானைகள் இறந்துபோயின.அந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பே, ஜூன் மாத மையத்திற்குள் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை இரட்டிப்பானது.
இதுவரை 350க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளதால் வன விலங்குகள் ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.தந்தங்கள் அகற்றப்படாமையால் அவை நோய்க்கிருமிகளால் உயிரிழந்தனவா அல்லது விஷம் ஏதாவது அவற்றின் மரணத்திற்கு காரணமா என்பது தெரியவில்லை.
மேலும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு
பரவக்கூடிய நோய் ஏதாவது அந்த யானைகளுக்கு இருக்குமா என்பதை அறிவதற்காக, அவற்றிற்கு உடற்கூறு ஆய்வு செய்யுமாறு அறிவியலாளர்கள் அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.ஆனால், கொரோனா காரணமாக அவற்றிற்கு உடற்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை