• Breaking News

    சீன செயலிகள் மீதான தடையால் 45,000 கோடி ரூபா வருமானம் இழப்பு

      டிக்-டாக் போன்ற சீன செயலிகள் மீதான தடையால் 'பைட்-டான்ஸ்' நிறுவனத்திற்கு 45,000 கோடி ரூபா வருமானம் இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    லடாக் எல்லையில் ஜூன் 15 ஆம்திகதி சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இருநாடுகளும் தங்களது எல்லையில் படைகளை குவித்து வருகின்றனர். 

    இதனிடையே இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிக்-டாக், ஹெலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சீன அரசு ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' டிக்-டாக் தடையால் அதன் தாய் நிறுவனமான 'பைட்-டான்ஸ்' நிறுவனத்திற்கு ₹45,000 கோடி வருமானம் இழப்பீடு ஏற்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளது. 

    அதில், டிக்-டாக் செயலியை அமெரிக்காவை விட இந்தியாவில் 2 மடங்கு அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்திய அரசு தடை விதித்துள்ளதால் சீன செயலிகள் மீதான முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    செல்போன் செயலிகளை ஆய்வு செய்யும் 'சென்சார் டூவர்' நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிவரப்படி, கடந்த மே மாதம் டிக்-டாக் செயலி 11.2 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட் டுள்ளது. சீன செயலிகள் மீதான தடையால் டிக்-டாக்செயலியின் தாய் நிறுவனமான 'பைட்-டான்ஸ்' நிறுவனத்திற்கு  45,000 கோடி ரூபா வருமானம் இழப்பு ஏற்படும்என்றுள்ளனர்.

     


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad