• Breaking News

    'வீடியோ'வால் சர்ச்சை பதிவை நீக்கிய ட்ரம்ப்

    அமெரிக்க  ஜனாதிபதி ட்ரம்ப்  இனவெறி பேச்சு அடங்கிய 'வீடியோ' பதிவை 'டுவிட்டரில்' வெளியிட்டு  அதற்கு எதிர்ப்பு எழுந்ததும் உடனடியாக நீக்கினார்.

    அமெரிக்காவில் ஜனாதிபதித்  தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ட்ரம்ப்  புளோரிடா மாகாண கிராமப்புறங்களில் நடைபெற்ற  தன் ஆதரவு பேரணியின் வீடியோவை 'டுவிட்டரில்' வெளியிட்டு  கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அந்த வீடியோவில் கோல்ப் வண்டியில் வந்த ஆதரவாளர் ஒருவர்  'வெள்ளையரே வலிமையானவர்' என  முழுக்கமிட்டது பதிவாகியுள்ளது.

    அந்த வீடியோவில் ட்ரம்பிற்கு எதிராக 'நாஜி  இனவெறியர்' என  பலர் கூச்சலிடுவதும் இடம் பெற்றுஉள்ளது. இந்நிலையில் ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவால் பெரும் சர்ச்சை எழுந்தது. புளோரிடா செனட் உறுப்பினரும் ஆப்ரிக்க அமெரிக்கருமான  டிம் ஸ்காட்,''டிரம்ப்  அந்த டுவிட்டர் பதிவை உடனடியாக நீக்க வேண்டும் '' என்றார்.

     ட்ரம்பை எதிர்த்து போட்டியிட உள்ள  ஜோ பிடன் ''அமெரிக்காவின் ஆன்மாவை மீட்க போராடி வரும் சூழலில்  ட்ரம்ப்  ஒரு தரப்பினருக்கு ஆதரவாக உள்ளது வெட்ட வெளிச்சமாகி விட்டது; போரில் நாம் வெல்வது உறுதி '' என்றார். இந்த எதிர்ப்புக்கு அஞ்சி  ட்ரம்ப்  சர்ச்சைக்குரிய வீடியோ பதிவை  டுவிட்டரில் இருந்து  உடனடியாக நீக்கினார்.

    இதையடுத்து  வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்  

     ட்ரம்புக்கு கிராமத்தினர் மீது அளவற்ற அன்பு உள்ளது. அதனால் அவர்களின் தேர்தல் பிரசார பதிவை வெளியிட்டார். ஆனால்  அதில்  சர்ச்சைக்குரிய முழக்கம் இருப்பதை அவர் கவனிக்கவில்லை. தற்போது அது நீக்கப்பட்டு விட்டது.இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad