ஆடை வாங்க முடியாது தவித்தேன் - கங்கனா
திரையுலகில் அறிமுகமான புதிதில் விழாக்களுக்கு அணிந்து செல்ல தன்னிடம் நல்ல ஆடைகள் கூட இருந்ததில்லை என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார் கங்கணா ரணவத்.
சினிமாவில் நடிக்கத் துவங்கிய பிறகும் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் கங்கணா ரணவத். பாலிவுட்டில் 12 கோடி சம்பளம் வாங்கும் நடிகையாகத் திகழும் இவர், தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’யில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், திரையுலகில் அறிமுகமான புதிதில் விழாக்களுக்கு அணிந்து செல்ல தன்னிடம் நல்ல ஆடைகள் கூட இருந்ததில்லை என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
“இதனால் நான் நடித்த படங்களுக்காக விருதுகள் வழங்கப்பட்டபோது அந்த விருது விழாக்களில் கூட பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் என்னைப்போலவே சிரமத்தில் இருந்த எனது ஆடை வடிவமைப்பாளர் எனக்காக நல்ல ஆடைகளை உருவாக்கித் தந்தார்,” என உருக்கமாகச் சொல்லியுள்ளார் கங்கணா.
கருத்துகள் இல்லை