மகளின்புகைப்படத்தை வெளியிட்ட உசைன் போல்ட்
உலகின் அதிவேக தடகள வீரரான உசைன் போல்ட் முதன்முறையாகத் தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஜமேக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீரர் உசைன் போல்ட். உலகின் அதிவேக மனிதர் என்ற பெயர் பெற்ற இவர் 8 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று சாதனைபடைத்துள்ளார். தொடர்ச்சியாக 3 முறை ஒலிம்பிக்கில் தங்கம் தட்டிச் சென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், உலகம் முழுவதும் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
போல்ட்டும் ஜமைக்காவைச் சேர்ந்த மாடல் அழகியான காசி பென்னட்டும் நீண்ட நாள்களாகக் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை 7-ம் தேதி தன் காதலி காசியின் பிறந்தநாளைக் கொண்டாடிய போல்ட், அன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக முதன்முறையாகத் தன் மகளின் பெயருடன் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தன் மகளுக்கு `ஒலிம்பியா லைட்னிங் போல்ட்’ எனப் பெயர் வைத்துள்ளார் உசைன் போல்ட்.
கருத்துகள் இல்லை