விமான நிலையத்தில் தூங்கியவர் விமானம் தவறவிட்டார்
துபாய் விமான நிலையத்தில் இந்தியர் ஷாஜகான் என்பவர் தூக்கத்தால் விமானத்தை தவற விட்ட சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா
வைரஸ் தொற்று ஊரடங்கால் ஐக்கிய அரபு அமீரகத்தில் 427 இந்தியர்கள் (கேரளாவை சேர்ந்தவர்கள்)
சிக்கி தவித்தனர். அவர்களை மீட்டு கொண்டு வருவதற்காக கேரள முஸ்லிம் கலாசார மையம், ஜம்போ
ஜெட் ராட்சத விமானத்துக்கு ஏற்பாடு செய்தது.
இந்த
விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு செல்வதற்காக , அபுதாபியில் ஒரு நிறுவனத்தில் ஸ்டோர்கீப்பராக
வேலை செய்துவந்த ஷாஜகான் என்பவர் 1100 திர்ஹாம் (சுமார் ரூ.22,500) கொடுத்து பதிவு
செய்திருந்தார்.
விமானத்தில்
ஏறுவதற்காக அவர் முந்திய நாளே தூங்காமல் இருந்தார். மறுநாள் அதிகாலையிலேயே துபாய் விமான
நிலையத்துக்கு வந்து விட்டார். விமானத்தில் ஏறுவதற்கான ‘செக்-இன்’ நடைமுறைகளை முடித்தார்.
கொரோனாவுக்கான துரித கருவி சோதனையும் முடிந்தது.
அதைத்
தொடர்ந்து விமானத்தில் ஏறுவதற்காக உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு 3-வது முனையத்தில்
உள்ள ‘போர்டிங்’
வாயிலை அடைந்தார். மற்றவர்களிடம் இருந்து விலகி அமர்ந்தார். நேரம் கடந்தது. மாலை
4.30 மணியை தாண்டியபோது லேசாக கண்மூடினார். கண்விழித்துப்பார்த்தால் அவர் ஏற வேண்டிய விமானம்
புறப்பட்டு சென்று விட்டதை அறிந்து துடித்துப்போனார்.
கருத்துகள் இல்லை