மருத்துவர்கள், தாதியருக்கு விமானக் கட்டணத்தில் சலுகை
கொரோனா கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் மருத்துவர்களும் தாதியரும் முதல்நிலை வீரர்களாக இருந்து, தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவதைப் பாராட்டும் விதத்தில் அவர்களுக்கு விமானப் பயணக் கட்டணத்தில் 25% சலுகை வழங்குகிறது இண்டிகோ நிறுவனம்.
இண்டிகோ நிறுவனத்தின் இணையத்தளம் வாயிலாக விமானச் சீட்டுக்கு முன்பதிவு செய்யும்போது, இந்த
சலுகைக்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விமான நிலையத்தில், ‘செக்
இன்’ நடைமுறையின்
போது, தாங்கள்
பணியாற்றும் மருத்துவமனையின் அடையாள அட்டையை, அவர்கள்
காண்பிக்க வேண்டும்.
இந்தாண்டு இறுதி வரை இந்த சலுகை திட்டம் அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை