• Breaking News

    வெளிநாட்டில் ஐ.பி.எல் நடைபெற வாய்ப்பு

     இந்த ஆண்டுக்கான .பி.எல்.   போட்டி வெளிநாட்டில் நடைபெற   அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து சர்வதேச கிறிக்கெற் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. மார்ச் 29 ஆம் திகதி மும்பையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்க இருந்த 13-வது .பி.எல். 20 ஓவர் கிறிக்கெற் போட்டி, கொரோனாவின் கோரதாண்டவத்தால் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. .பி.எல். போட்டியை நடத்த முடியாமல் போனால் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் இந்த போட்டியை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி விட வேண்டும் என்பதில் இந்திய  கிறிக்கெற் சபை  தீவிரமாக உள்ளது.

    அவுஸ்திரேலியாவில் அக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15- ஆம் திகதி வரை 20 ஓவர் உலக கோப்பை  கிறிக்கெற் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டி நடைபெற வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்பட்டாலும், இந்த விஷயத்தில் முடிவெடுக்க காலம் தாழ்த்தி வரும் .சி.சி. இந்த மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 20 ஓவர் உலகக்கிண்ணப் போட்டி தள்ளிப்போனால் அந்த காலக்கட்டத்தில் (அக்டோபர், நவம்பர்) .பி.எல். போட்டியை நடத்தலாம் என்று இந்திய கிறிக்கெற் சபை காய் நகர்த்தி வருகிறது.

    .பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்த முன்னுரிமை அளித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ்சின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்திய மண்ணில் இந்த போட்டி அரங்கேறுவது கடினம் தான். எனவே இந்த போட்டியை வெளிநாட்டில் நடத்துவது குறித்தும் இந்திய கிறிக்கெற் சபை  ஆலோசனை நடத்தி வருகிறது.

    இது குறித்து இந்திய கிறிக்கெற்  சபை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த ஆண்டுக்கான .பி.எல். போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அனேகமாக இந்த போட்டி வெளிநாட்டில் நடைபெறவே வாய்ப்புள்ளது. கொரோனா பரவலால் தற்போது இந்தியாவில் நிலவும் சூழ்நிலையை பார்க்கையில், ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் போட்டியை நடத்தினாலும் கூட பொருத்தமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்காது என்று தான் தோன்றுகிறது. இதனால் இந்த போட்டியை ஐக்கிய அரபு அமீரகம் , இலங்கையில் நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பின் தன்மையை பொறுத்து இந்த போட்டியை எந்த நாட்டில் நடத்துவது என்பது விரைவில் முடிவு செய்யப்படும்என்றார்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad