விவோ விளம்பரத்தால் சிகலில் ஐபிஎல்
சீனாவுக்கு எதிரான மனநிலை இந்தியாவில் வலுத்து வருகிறது. சீன நிறுவனங்கள் மற்றும் பொருட்களுக்கு எதிராக குரல் எழும்பத் துவங்கி உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் 59 சீன மொபைல் ஆப்களை தடை செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதன் மூலம், மத்திய அரசும் கூட சீனாவுக்கு எதிரான மன நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிசிசிஐ சீன ஸ்பான்சர் விவகாரத்தில் சிக்கி உள்ளது.
, கொரோனா வைரஸ்
லாக்டவுன்
காரணமாக ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. நஷ்டத்தை ஈடுகட்ட திட்டம்
ஐபிஎல் தொடர் நடக்காமல் போனால் பிசிசிஐக்கு மட்டும் 4,000 கோடி நஷ்டம் ஏற்படும் என
கூறப்படுகிறது. இனி ஐபிஎல் தொடர் நடத்தினாலும் வழக்கமாக கிடைக்கும் வருவாயை பெற முடியாது.
ஆனாலும், நஷ்டத்தை ஈடுகட்டலாம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது பிசிசிஐ
கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபுறம் இந்தியாவில் அதிகரித்து
வரும் நிலையில் மறுபுறம் சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. சீன இராணுவத்துடன்
நடந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் பலியானார்கள். அதனால், சீனாவுக்கு எதிரான
மனநிலை இந்தியாவில் வலுத்து வருகிறது. சீன விளம்பரதாரர்கள் சீன நிறுவனங்கள் மற்றும்
சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் எழத் துவங்கி உள்ளது. ஐபிஎல் தொடரின்
முக்கிய ஸ்பான்சரான விவோ மொபைல் நிறுவனம் சீனாவை சேர்ந்தது. அதனால், ஐபிஎல் தொடருக்கு
எதிர்ப்புகள் கிளம்ப வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், சீன விளம்பரதாரர்களை கைவிட வேண்டிய
கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. அதற்காக ஐபிஎல் கூட்டத்தை கூட்டவும் திட்டமிட்டு உள்ளது.
விவோவின் விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதில் சில சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது
2022ஆம் ஆண்டு வரை விவோ நிறுவனம் ஐபிஎல்-உடன்
ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனத்தை இப்போது நீக்க வேண்டும் என்றால் ஒப்பந்தத்தில்
இடம் பெற்றுள்ள எக்ஸிட் கிளாஸ் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதை பின்பற்றும் போது
ஐபிஎல்-லுக்கு பாதகமாக, நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது
விவோ நிறுவனம்
தற்போது ஆண்டு ஒன்றுக்கு 440 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரத்திற்காக ஐபிஎல்-லுக்கு
அளிக்கிறது. தற்போது கொரோனா வைரஸால் பொருளாதாரம் தேங்கி உள்ள நிலையில், அந்த நிறுவனத்தை
நீக்கி விட்டு அதே அளவு விளம்பரத் தொகையை அளிக்கும் வேறு நிறுவனத்தை கண்டுபிடிப்பதும்
கடினம்.
சீன விளம்பரதாரர்கள் குறித்து விவாதிக்க விரைவில்
ஐபிஎல் நிர்வாகக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இது வரை அந்தக்
கூட்டம் நடைபெறவில்லை. டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைக்கும் வரை அந்த கூட்டத்தை நடத்தாமல்
காத்திருப்பதாக பிசிசிஐ வட்டாரம் கூறுகிறது.
அப்படி அந்த கூட்டம் நடக்கும் போது, எக்ஸிட் கிளாஸ்
பிசிசிஐ-க்கு பாதகமாக இருந்தால், நிச்சயம் விவோ நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தம் தொடரும்
என்றே பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. சீன நிறுவனத்துக்கு எதிரான எதிர்ப்பை விவோ
தாமாகவே எதிர்கொள்ள வேண்டும் என பிசிசிஐ அவர்களிடம் கேட்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை