பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் பயனாளர்களின் விவரங்களை கேட்க
ஹொங்கொங்கில் உள்ள பயனாளர்களின் விவரங்களை தரும்படி ஹொங்கொங் நிர்வாகம் கேட்க இருந்த நடைமுறையை பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
சீனாவில் கட்டுப்பாட்டில் தன்னாச்சி அதிகாரம் பெற்ற பகுதியாக இருந்து வந்த ஹொங்கொங்கில் பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர், டெலகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த இதுவரை எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்து வந்தது.
மேலும், சீனாவை போல் அல்லாமல் ஹொங்கொங்கில் சமூக வலைதளங்களில் அரசின் தணிக்கை நடைமுறைகள் எதுவும் இல்லாமல் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்க கருத்துரிமை நிலவி வந்தது.
அதேபோல், முன்னதாக ஹொங்கொங் நிர்வாகம் சமூக வலைதளவாசி ஒருவரின் விவரங்களை பெறவேண்டுமானால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கோரிக்கை வைப்பதற்கு முன் அந்நகர நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெறவேண்டும்.
ஆனால், தற்போது சீனாவின் தேசிய பாதுகாப்புச்சட்டம் ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஹாங்காங்கில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியில் சீன அரசு செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, சமூக வலைதளத்தில் சீனாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நபர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபடத்தொடங்கியுள்ளது.
இதற்காக, ஹொங்கொங் சமூகவலைதள பயனாளர்களின் விவரங்களை டுவிட்டர், பேஸ்புக் மற்றும் அதன் துணை நிறுவனமான வாட்ஸ் அப் போன்றவற்றிடம் இருந்து அதிகாரத்தை பயன்படுத்தி வாங்க முயற்சிகளை மேற்கொண்டது.
குறிப்பாக, சீனா தற்போது அமல்படுத்தியுள்ள புதிய சட்டத்தின் மூலம் நீதிமன்ற அனுமதியின்றி சமூகவலைதள நிறுவனங்களிடம் நேரடியாக தகவல்களை கேட்க முடியும்.
இதனால், கைது நடவடிக்கையை சந்திக்கலாம் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள் தங்கள் சமூகவலைதள பக்கங்களில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் பயனாளர்களின் விவரங்களை ஹொங்கொங் அரசாங்கமோ, சட்டம் ஒழுங்கு அதிகாரிகளோ கேட்க இருந்த நடைமுறைகளுக்கு டுவிட்டர், டெலகிரமாம், பேஸ்புக் அதன் கிளை நிறுவனமான வாட்ஸ் அப் போன்ற சமூகவலைதள நிறுவனங்கள் தடை விதித்துள்ளது.
இந்த
நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஹொங்கொங் மக்களின் சமூக
கணக்கு
விவரங்களை அப்பகுதி அரசாங்கமோ, அதிகாரிகளோ இனி
பெற
முடியாது.
கருத்துகள் இல்லை