• Breaking News

    ஹொங்கொங் குடியுரிமை : அவுஸ்திரேலியா பரிசீலனை

     சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்படும் ஹொங்கொங் மக்களுக்கு அடைக்கலம் தந்து குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக  அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

    சீன அரசு  உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி  ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் கீழ்  பிரிவினைக்கு குரல் கொடுப்போர்  சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை  தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யலாம். அத்துடன்  சீனாவுக்கு நாடு கடத்தவும் சட்டத்தில் இடமுள்ளதாக கூறப்படுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து ஹொங்கொங்கில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதன் முறையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்இ 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு  அவுஸ்திரேலிய பிரதமர்  ஸ்காட் மாரிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது, :ஹொங்கொங்கில் நடைபெறும் போராட்டம் கவலை அளிக்கிறது. பல வாரங்களுக்கு முன்பாகவே  ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத் தால் பாதிக்கப்படுவோருக்கு  அடைக்கலம் வழங்குவது குறித்து  அரசு பரிசீலிக்கத் துவங்கி விட்டது. இது குறித்து இறுதி முடிவு எடுத்த பின் முறையாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

     

      ஹொங்கொங்கில்  பிரிட்டனைச் சேர்ந்த  3௦ இலட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். அவர்களுக்கு  குடியுரிமை வழங்கப்படும் என  பிரிட்டன் அறிவித்துள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad